தில்லியில் நடைபெறுவதாக இருந்த ஆசியக் குத்துச்சண்டை போட்டி துபைக்கு மாற்றம் ‘
மே மாதம் தில்லியில் நடைபெறுவதாக இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபைக்கு மாற்றப்பட்டுள்ளது.


மே மாதம் தில்லியில் நடைபெறுவதாக இருந்த ஆசிய குத்துச்சண்டை போட்டி துபைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் மே 21 முதல் 31 வரை நடைபெறுவதாக இருந்தது. எனினும் இந்தியாவில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை போட்டி தில்லியில் நடைபெறுவதற்குப் பதிலாக துபையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பயணிகள் விமானங்களுக்குப் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகக் குத்துச்சண்டை சம்மேளனத்துடன் இணைந்து இப்போட்டியை இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய குத்துச்சண்டை போட்டி துபையில் மே 21 முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய ஆடவர் அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் மேரி கோம் (51 கிலோ) தலைமையிலான மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...