தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு ரூ.6 கோடி பரிசு - ஹரியானா அரசு அறிவிப்பு
டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதலின் இறுதிச்சுற்றில் முதல் வாய்ப்பில் 87.03 மீ. தூரம் வீசி அசத்தினார் 23 வயது நீரஜ் சோப்ரா


டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதலின் இறுதிச்சுற்றில் முதல் வாய்ப்பில் 87.03 மீ. தூரம் வீசி அசத்தினார் 23 வயது நீரஜ் சோப்ரா. அவருக்குச் சவால் அளிக்கக்கூடிய வகையில் ஜெர்மனியின் வெட்டர் 82.52 மீ மட்டுமே வீசினார். ஜெர்மனியின் வெபர் ஜூலியன் 85.30 மீ தூரம் வீசினார். இதனால் முதல் சுற்றில் நீராஜ் சோப்ரா தான் முதலிடம் வகித்தார். 2-வது வாய்ப்பில் இன்னும் அதிகமாக 87.58 மீ. தூரம் வீசி இந்திய ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார். மூன்றாவது சுற்றில் 76.79 மீ. தூரம் வீசினார்.
இதையும் படிக்க | வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா: தலைவர்கள் வாழ்த்து
இறுதியில் யாரும் நீரஜ் வீசிய அளவைத் தாண்டவில்லை என்பதால் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.
இதனால் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிற நிலையில் ஹரியானா மாநில அரசு அவருக்கு 6 கோடி பரிசுத்தொகை வழங்குவதாகவும் கிரேட் 1 பிரிவில் அரசு வேலையும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...