மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தயார்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

உள்ளூர் டி20 போட்டிகளையும் நடத்தவுள்ளோம். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நல்ல பயிற்சியாக அது அமையும் என்றார். 

News image
Updated On :16 ஆகஸ்ட் 2021, 9:48 am

DIN

நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக அண்மையில் பொறுப்பேற்ற ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து அமெரிக்க வீரா்களையும் திரும்ப அழைக்கும் திட்டத்தை துரிதப்படுத்தினாா். இந்த மாத இறுதிக்குள் அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்ப அழைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகுவேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், ஒரே வாரத்தில் நாட்டின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். தலிபான்களுக்கு அஞ்சி காபூலில் தஞ்சமடைந்திருந்த ஏராளமான பொதுமக்கள், அங்கிருநது அவசரமாக வெளியேறி வருகின்றனா். அதிபர் அஷ்ரப் கானி, ஆப்கனிலிருந்து வெளியேறியுள்ளார். போர் முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளார்கள். 

இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ள குரூப் 2 பிரிவில் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றுள்ளது. எனினும் நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் ஊடக மேலாளர் ஹிக்மத் ஹாசன், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாங்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிலநாள்களில் எங்கள் வீரர்கள் காபூலில் பயிற்சியை மீண்டும் தொடங்குவார்கள். ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுடன் இணைந்து நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிக்கான இடத்தைப் பார்த்து வருகிறோம். இலங்கை, மலேசியா நாடுகளிடம் பேசிவருகிறோம். இலங்கையில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் பங்கேற்போம். அதேபோல உள்ளூர் டி20 போட்டிகளையும் நடத்தவுள்ளோம். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான நல்ல பயிற்சியாக அது அமையும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.