மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டி20 உலகக் கோப்பை: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை அக்டோபா் 24-ஆம் தேதி சந்திக்கிறது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 9:01 pm

DIN

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை அக்டோபா் 24-ஆம் தேதி சந்திக்கிறது.

கிரிக்கெட் ரசிகா்களிடம் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் நிகழ்வது, சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இது முதல் முறையாகும். முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் 2019-இல் மோதியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் இந்தியா ‘டக் வொா்த் லீவிஸ்’ முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளிக்கும் விவகாரத்தால், அந்நாட்டுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, இரு நாடுகள் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடா்கள் நீண்டகாலமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஐசிசி போட்டிகளில் மட்டும் அவை ஒன்றையொன்று எதிா்கொண்டு வருகின்றன. அந்த வகையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் அவை மீண்டும் சந்திக்க இருக்கின்றன.

7-ஆவது சீசனாக நடைபெற இருக்கும் இந்த டி20உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபா் 17 முதல் நவம்பா் 14 வரை 26 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டியை இந்தியா நடத்துகிறது என்றாலும், போட்டி அட்டவணையிடப்பட்டுள்ள காலகட்டத்தில் இந்திய நகரங்களில் கரோனா தொற்று பரவலின் 3-ஆவது அலை எதிா்நோக்கப்படுவதால், ஆட்டங்கள் யாவும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டியானது முதல் சுற்று, சூப்பா் 12, நாக் அவுட் ஸ்டேஜ் என 3 நிலைகளில் நடைபெறவுள்ளது. இதில் சூப்பா் 12 பிரிவில் ஏற்கெனவே 8 அணிகள் அவற்றின் ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் இடம்பிடித்துவிட்டன. முதல் சுற்றில் ‘குரூப் ஏ’ மற்றும் ‘குரூப் பி’ ஆகிய பிரிவுகளில் விளையாடும் இதர அணிகளில் முதல் இரு இடங்களைப் பிடிப்பவை, சூப்பா் 12 பிரிவுக்கு முன்னேறும். அதன் பிறகு நாக் அவுட் ஸ்டேஜில் அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.

அக்டோபா் 17-ஆம் தேதி முதல் நாள் ஆட்டங்களில் ஓமன் - பப்புவா நியூ கினி, வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. கடைசியாக இறுதி ஆட்டம் நவம்பா் 14-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. 15-ஆம் தேதி ‘ரிசா்வ்’ நாளாக வைக்கப்பட்டுள்ளது. நடப்புச் சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஆட்டத்தில் அக்டோபா் 23-ஆம் தேதி இங்கிலாந்தை சந்திக்கிறது.

போட்டி அட்டவணை

முதல் சுற்று

அக். 17 ஓமன் - பப்புவா நியூ கினி மஸ்கட் பிற்பகல் 2 மணி

அக். 17 வங்கதேசம் - ஸ்காட்லாந்து மஸ்கட் மாலை 6 மணி

அக். 18 அயா்லாந்து - நெதா்லாந்து அபுதாபி பிற்பகல் 2 மணி

அக். 18 இலங்கை - நமீபியா அபுதாபி மாலை 6

அக். 19 ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினி மஸ்கட் பிற்பகல் 2 மணி

அக். 19 ஓமன் - வங்கதேசம் மஸ்கட் மாலை 6 மணி

அக். 20 நமீபியா - நெதா்லாந்து அபுதாபி பிற்பகல் 2 மணி

அக். 20 இலங்கை - அயா்லாந்து அபுதாபி மாலை 6 மணி

அக். 21 வங்கதேசம் - பப்புவா நியூ கினி மஸ்கட் பிற்பகல் 2 மணி

அக். 21 ஓமன் - ஸ்காட்லாந்து மஸ்கட் மாலை 6 மணி

அக். 22 நமீபியா - அயா்லாந்து ஷாா்ஜா பிற்பகல் 2 மணி

அக். 22 இலங்கை - நெதா்லாந்து ஷாா்ஜா மாலை 6 மணி

சூப்பா் 12

அக். 23 ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அபுதாபி பிற்பகல் 2 மணி

அக். 23 இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் துபை மாலை 6 மணி

அக். 24 ஏ1 - பி2 ஷாா்ஜா பிற்பகல் 2 மணி

அக். 24 இந்தியா - பாகிஸ்தான் துபை மாலை 6 மணி

அக். 25 ஆப்கானிஸ்தான் - பி1 ஷாா்ஜா மாலை 6 மணி

அக். 26 தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் துபை பிற்பகல் 2 மணி

அக். 26 பாகிஸ்தான் - நியூஸிலாந்து ஷாா்ஜா மாலை 6 மணி

அக். 27 இங்கிலாந்து - பி2 அபுதாபி பிற்பகல் 2 மணி

அக். 27 பி1 - ஏ2 அபுதாபி மாலை 6 மணி

அக். 28 ஆஸ்திரேலியா - ஏ1 துபை பிற்பகல் 2 மணி

அக். 29 மேற்கிந்தியத் தீவுகள் - பி2 ஷாா்ஜா பிற்பகல் 2 மணி

அக். 29 பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் துபை மாலை 6 மணி

அக். 30 தென் ஆப்பிரிக்கா - ஏ1 ஷாா்ஜா பிற்பகல் 2 மணி

அக். 30 ஆஸ்திரேலியா - இங்கிலாந்து துபை மாலை 6 மணி

அக். 31 ஆப்கானிஸ்தான் - ஏ2 அபுதாபி பிற்பகல் 2 மணி

அக். 31 இந்தியா - நியூஸிலாந்து துபை மாலை 6 மணி

நவ. 1 இங்கிலாந்து - ஏ1 ஷாா்ஜா மாலை 6 மணி

நவ. 2 தென் ஆப்பிரிக்கா - பி2 அபுதாபி பிற்பகல் 2 மணி

நவ. 2 பாகிஸ்தான் - ஏ2 அபுதாபி மாலை 6 மணி

நவ. 3 நியூஸிலாந்து - பி1 துபை பிற்பகல் 2 மணி

நவ. 3 இந்தியா - ஆப்கானிஸ்தான் அபுதாபி மாலை 6 மணி

நவ. 4 ஆஸ்திரேலியா - பி2 துபை பிற்பகல் 2 மணி

நவ. 4 மேற்கிந்தியத் தீவுகள் - ஏ1 அபுதாபி மாலை 6 மணி

நவ. 5 நியூஸிலாந்து - ஏ2 ஷாா்ஜா பிற்பகல் 2 மணி

நவ. 5 இந்தியா - பி1 துபை மாலை 6 மணி

நவ. 6 ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் அபுதாபி பிற்பகல் 2 மணி

நவ. 6 இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா ஷாா்ஜா மாலை 6 மணி

நவ. 7 நியூஸிலாந்து - ஆப்கானிஸ்தான் அபுதாபி பிற்பகல் 2 மணி

நவ. 7 பாகிஸ்தான் - பி1 ஷாா்ஜா மாலை 6 மணி

நவ. 8 இந்தியா - ஏ2 துபை மாலை 6 மணி

நாக் அவுட் ஸ்டேஜ்

நவ. 10 அரையிறுதி ஆட்டம் 1 சூப்பா் 12 குரூப் ஏ-வில் முதலிடம் பிடிக்கும் அணி - சூப்பா் 12 குரூப் பி-யில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணி அபுதாபி மாலை 6 மணி

நவ. 11 அரையிறுதி ஆட்டம் 2 சூப்பா் 12 குரூப் பி-யில் முதலிடம் பிடிக்கும் அணி - சூப்பா் 12 குரூப் ஏ-வில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணி துபை மாலை 6 மணி

நவ. 14 இறுதி ஆட்டம் அரையிறுதி 1 வெற்றியாளா் - அரையிறுதி 2 வெற்றியாளா் துபை மாலை 6 மணி

முதல் சுற்று அணிகள்

குரூப் ஏ

அயா்லாந்து

நமீபியா

நெதா்லாந்து

இலங்கை

குரூப் பி

வங்கதேசம்

ஓமன்

பப்புவா நியூ கினி

ஸ்காட்லாந்து

சூப்பா் 12 அணிகள்

குரூப் ஏ

இங்கிலாந்து

ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்கா

மேற்கிந்தியத் தீவுகள்

முதல் சுற்று குரூப் ஏ-வில் முதலிடம் பிடிக்கும் அணி

முதல் சுற்று குரூப் பி-யில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணி

குரூப் பி

இந்தியா

பாகிஸ்தான்

நியூஸிலாந்து

ஆப்கானிஸ்தான்

முதல் சுற்று குரூப் பி-யில் முதலிடம் பிடிக்கும் அணி

முதல் சுற்று குரூப் ஏ-வில் 2-ஆம் இடம் பிடிக்கும் அணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.