மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு, புதிய விக்கெட் கீப்பர் தேர்வு!

ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. 

News image
ஆரோன் ஃபிஞ்ச்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:19 am

DIN

டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ள ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் அனைவரும் அணிக்குத் திரும்பியுள்ளார்கள். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்க்லிஷ் புதிதாகத் தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 5 டி20 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மேத்யூ வேட், அகர், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஸாம்பா, ஹேஸில்வுட், ஸ்டாய்னிஸ், ஸ்வப்சன், ஜோஷ் இங்லிஷ். 

மாற்று வீரர்கள்: டேன் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.