ஆர்சிபி வீரருக்கு கரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 ஏலத்தில் ஆர்சிபி அணி இவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது.


வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது நியூசிலாந்து அணி. இதற்காக டாக்காவுக்கு நியூசிலாந்து வீரர்கள் வந்துள்ளார்கள். இந்நிலையில் டாக்காவுக்கு வந்த நியூசி. வீரர் ஃபின் ஆலன் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் ஹண்ட்ரெட் போட்டியில் விளையாடிவிட்டு கடந்த 20-ம் தேதி டாக்காவுக்கு வந்தார் 22 வயது ஃபின் ஆலன். இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட ஆலனுக்கு லேசான கரோனா அறிகுறிகளே உள்ளன. இதனால் அணியினர் தங்கும் விடுதியில் அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இரு நாள்கள் தொடர்ச்சியாகப் பரிசோதனை செய்து அதில் கரோனா இல்லை என்று உறுதியானால் மட்டுமே அணியினருடன் ஃபின் ஆலனால் இணைய முடியும். ஃபின் ஆலன், நியூசி. அணிக்காக 3 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் 2021 ஏலத்தில் ஆர்சிபி அணி இவரை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்தது.
மூன்று நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு ஆகஸ்ட் 27 முதல் அனைத்து நியூசி. வீரர்களும் பயிற்சியைத் தொடங்குவார்கள்.
செப்டம்பர் 1 முதல் தொடங்கும் டி20 தொடர், 10-ம் தேதி நிறைவடைகிறது.
Dreams do come true , Finn!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...