தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த ஆர்சிபி அணி!

இங்கிலாந்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது. 

News image

ஆர்சிபி அணி (கோப்புப் படம்)

Updated On :26 ஆகஸ்ட் 2021, 10:40 am

DIN

இங்கிலாந்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது. 

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் கார்டனை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து கவுண்டியில் சஸ்ஸெக்ஸ் அணிக்காக கார்டன் விளையாடி வருகிறார். ஆர்சிபி அணியில் இருந்த கேன் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஜார்ஜ் கார்டன் தேர்வாகியுள்ளார். 24 வயது கார்டன் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளார். 

செப்டம்பர் 20 அன்று கேகேஆர் அணிக்கு எதிராகத் தனது முதல் ஆட்டத்தை விளையாடுகிறது ஆர்சிபி அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.