நெதர்லாந்து மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரெடெரிக் சர்வதேச டி20 ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
டி20 ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு 4 ஓவர்களே வழங்கப்படுவதால் அதில் அதிக விக்கெட்டுகளை எடுப்பது சிரமம். நேபாளத்தைச் சேர்ந்த அஞ்சலி சந்த், மாலத்தீவுகள் அணிக்கு எதிராக 2019-ல் ஒரு ரன்னும் கொடுக்காமல் ஆறு விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இந்நிலையில் நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரெடெரிக். ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி20-யில் ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் ஏழு விக்கெட்டுகளை இதற்கு முன்பு யாரும் எடுத்ததில்லை. ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் தீபக் சஹார், 2019-ல் வங்கதேசத்துக்கு எதிராக ஏழு ரன்கள் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஐரோப்பிய தகுதிச்சுற்று ஆட்டம் நெதர்லாந்து - பிரான்ஸ் அணிகளுக்கிடையே ஸ்பெயினில் நடைபெற்றது. முதலில் விளையாடிய பிரான்ஸ் அணி 17.5 ஓவர்களில் 33 ரன்களுக்குச் சுருண்டது. நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் பிரெடெரிக் 3 ரன்கள் மட்டும் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு மெயிடன் ஓவர்களை வீசினார். ஆறு வீராங்கனைகளை போல்ட் செய்து அசத்தினார். இதன்பிறகு விளையாடிய நெதர்லாந்து அணி, 3.4 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி! பேரவை செய்திகள் - நேரலை

மூடநம்பிக்கைகளுக்கு முன்னுரிமை தராமல்..! நம்பிக்கை வாக்கெடுப்பில் வன்னி அரசு! | VCK

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

தவெகவுக்கு ஆதரவு! அதிமுகவின் 2 அணிகளால் பேரவையில் சலசலப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

