நவம்பர் மாத சிறந்த வீரர் யார்? 3 பெயர்கள் பரிந்துரை
நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.


நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், பாகிஸ்தானின் ஆபித் அலி மற்றும் நியூசிலாந்தின் டிம் சௌதி ஆகியோரது பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.
நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய, டி20 உலகக் கோப்பை உள்பட நவம்பரில் நடைபெற்ற அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன.
டேவிட் வார்னர்:
நவம்பரில் 4 சர்வதேச டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 209 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 69.66. ஸ்டிரைக் ரேட் 151.44.
ஆபித் அலி:
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 133 மற்றும் 91 ரன்கள் எடுத்தார்.
டிம் சௌதி:
இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நவம்பரில் நடைபெற்ற ஆட்டங்களில் மட்டும் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுதவிர மகளிர் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் அனாம் அமின், வங்கதேசத்தின் நஹிடா அக்தெர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஹாலே மேத்யூஸ் ஆகியோர் நவம்பர் மாத சிறந்த வீராங்கனைக்கான விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...