ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டதா? மௌனம் கலைத்த கங்குலி

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ரோஹித் சர்மாவே வழிநடத்த வேண்டும் என்கிற முடிவைத் தேர்வுக் குழுவும் பிசிசிஐயும் சேர்ந்தே எடுத்ததாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2021, 2:17 pm

DIN


ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை ரோஹித் சர்மாவே வழிநடத்த வேண்டும் என்கிற முடிவைத் தேர்வுக் குழுவும் பிசிசிஐயும் சேர்ந்தே எடுத்ததாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கும் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா புதன்கிழமை நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக விராட் கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், கோலி விலக மறுத்துவிட்டதாகவும் ஏராளமான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.

இந்த நிலையில், புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமித்திருப்பது பற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு சௌரவ் கங்குலி பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார்.

கங்குலி கூறியது:

"இந்த முடிவை பிசிசிஐயும், தேர்வுக் குழுவும் சேர்ந்துதான் எடுத்தது. டி20 கிரிக்கெட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. ஆனால், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பிறகு, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இரண்டு வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது எனத் தேர்வுக் குழுவினர் எண்ணினர். எனவே, டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவும் செயல்படட்டும் என முடிவெடுக்கப்பட்டது.

பிசிசிஐ தலைவராக விராட் கோலியிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசினேன். தேர்வுக் குழுத் தலைவர்களும் அவரிடம் பேசினார்கள்.

ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பு மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாகத் தொடருவார். இந்திய கிரிக்கெட் சரியான கரங்களில் இருப்பதை பிசிசிஐ உறுதியாக நம்புகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நன்றி" என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.