உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.
உலக பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரின் லோ கீன் யூவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொண்டார். முதல் கேமின் தொடக்கத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 9-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால், யூ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இதனால், முதல் கேமை கிடாம்பி ஸ்ரீகாந்த் வெறும் 16 நிமிடங்களில் 15-21 என்ற கணக்கில் இழந்தார்.
இதையும் படிக்க | யு-19 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
தங்கப் பதக்கம் வெல்லும் கனவோடு கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது கேமை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடுமையானப் போராட்டத்தை வெளிப்படுத்தியபோதிலும், அவரால் வெல்ல முடியவில்லை. 20-22 என்ற கணக்கில் இதையும் இழந்தார்.
இதன்மூலம், 15-21, 20-22 என்கிற நேர் கேம் கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார். எனினும், ஆடவர் ஒற்றையரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை கிடாம்பி ஸ்ரீகாந்த் படைத்துள்ளார்.
அதேசமயம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையை லோ கீன் யூ பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்

சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்!

ஏப். 15ல் குமரியில் பிரதமருடன் பிரசாரம்; 210 தொகுதிகளில் வெல்வோம்: இபிஎஸ் பேட்டி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


