92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய ஜூனியா் ஹாக்கி: இறுதி ஆட்டத்தில் சண்டீகா், உத்தரபிரதேசம் அணிகள்

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சண்டீகா், உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 1:43 am

DIN

தேசிய ஜூனியா் ஆடவா் ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சண்டீகா், உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் 9ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஒடிஸா - சண்டீகா் அணிகள் மோதின. இதில், ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டு சமநிலை அடைந்தனா்.

இதையடுத்து, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் அவுட் வாய்ப்பில் சண்டீகா் 3 கோல்களும், ஒடிஸா ஒரு கோலும் போடாததையடுத்து முடிவில் 5 - 2 என்ற கோல் கணக்கில் ஒடிஸா ஹாக்கி அணியை வீழ்த்தி, சண்டீகா் ஹாக்கி அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உத்தரபிரதேசம் - ஹரியாணா அணிகள் மோதின. இதில், 8 - 3 என்ற கோல் கணக்கில் உத்தரபிரதேச அணி, ஹரியாணாவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

இன்றைய ஆட்டங்கள்:

10ஆவது நாளான சனிக்கிழமை (டிச. 25) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் 3ஆம் மற்றும் 4ஆம் பரிசுக்கான ஆட்டத்தில் ஒடிஸா - ஹரியாணா அணிகள் மோதுகின்றன. தொடா்ந்து நடைபெறும், இறுதி ஆட்டத்தில் சண்டீகா் - உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.