ஆஸி. தொடருக்கு முன்பு ராகுல் டிராவிட் அளித்த முக்கியமான அறிவுரை: ரஹானே
வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டாம் என ராகுல் டிராவிட் அறிவுறுத்தியதாக ரஹானே கூறியுள்ளார்.


வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டாம் என ராகுல் டிராவிட் அறிவுறுத்தியதாக ரஹானே கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்றது. இதில் கடைசி நாளன்று கடினமான இலக்கை விரட்டி டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.
முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து மோசமாகத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு ரஹானே தலைமையில் விளையாடிய இந்திய அணி, மெல்போர்ன் டெஸ்டை வென்றது. சிட்னியில் நடைபெற்ற 3-வது டெஸ்டைக் கடுமையாகப் போராடி டிரா செய்தது. 4-வது டெஸ்டில் கடினமான இலக்கை 5-ம் நாளில் விரட்டி பிரிஸ்பேன் டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரையும் பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றியது.
ஹர்ஷா போக்ளேவுடனான உரையாடலில் ஆஸி. டெஸ்ட் தொடர் பற்றி ரஹானே கூறியதாவது:
ஆஸி. தொடருக்கு முன்பு டிராவிட் எனக்கு போன் செய்தார். அப்போது, துபாயிலிருந்து ஆஸி. செல்லத் தயாராக இருந்தோம். அவர் சொன்னார், எந்த அழுத்தமும் இருக்க வேண்டாம். முதல் டெஸ்டுக்குப் பிறகு இந்திய அணிக்குத் தலைமை தாங்குகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். மனத்தளவில் வலிமையுடன் இருங்கள். வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்ய வேண்டாம். டிராவிடுக்கு பேட்டிங் என்றால் பிடிக்கும். நான் செய்த தவறை (வலைப்பயிற்சியில் அதிக நேரம் பேட்டிங் செய்தது) நீங்கள் செய்ய வேண்டாம் என்றார்.
டிராவிட் மேலும் கூறினார், டெஸ்ட் தொடருக்கு நீங்கள் தயாராகியிருப்பது சரியாக உள்ளது. நீங்கள் நன்றாக விளையாடி வருகிறீர்கள். எனவே எந்த அழுத்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். அணியை எப்படி வழிநடத்தி அணி வீரர்களுக்கு எப்படி நம்பிக்கை அளிக்கப் போகிறீர்கள் என்பதைப் பற்றி மட்டும் யோசியுங்கள். முடிவுகளைப் பற்றி கவலை வேண்டாம். அது தானாக நடக்கும் என்றார். அந்த உரையாடல் எனக்கு மகிழ்ச்சி அளித்தது என ரஹானே கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...