முதல் டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவார்: விராட் கோலி
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவார் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13-ல் தொடங்குகிறது. முதல் டெஸ்டைக் காண ரசிகர்களுக்கு அனுமதியில்லை.
ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் டெஸ்டின் 4-வது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்து இந்திய அணி தொடரை வெல்ல முக்கியப் பங்கு வகித்தார் ரிஷப் பந்த். இதனால் சென்னை டெஸ்டில் அவர் விளையாடவுள்ளார்.
நாளை டெஸ்ட் தொடர் தொடங்குவதால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. அப்போது அவர் பேசியதாவது:
நாளை தொடங்கும் சென்னை டெஸ்டில் ரிஷப் பந்த் விளையாடுவார். ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நல்ல நிலைமையில் உள்ளார். எனவே அவரைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறோம். ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிறப்பாக விளையாடி வருகிறார். தன்னுடைய உடற்தகுதி மற்றும் திறமையில் கடுமையாக உழைத்துள்ளார். ரிஷப் பந்தின் வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...