இஷாந்த் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்: அஸ்வின் விருப்பம்
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விருப்பம் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை இஷாந்த் சர்மா எட்டினார். இதை எட்டும் 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து, காணொலி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த அஸ்வின், இஷாந்த் பற்றி கூறியது:
"இந்திய அணியில் கடுமையாக உழைக்கக் கூடிய கிரிக்கெட் வீரர்களில் இஷாந்த் சர்மாவும் ஒருவர். அவர் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார். மிகவும் உயரமாக இருப்பதாலேயே அவருடைய 14 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய விஷயங்களைக் கையாள வேண்டியிருக்கும்.
இஷாந்த் சர்மா ஆஸிதிரேலியாவுக்குச் சென்று ரிக்கி பாண்டிங் விக்கெட்டை (2007-08) வீழ்த்தியிருக்கிறார். அதன்பிறகு, நிறைய சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். காயங்களைக் கடந்திருக்கிறார். இந்தியாவில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக 100 டெஸ்ட் ஆட்டங்களை நெருங்குவது நகைச்சுவை அல்ல. அது மிகப் பெரிய சாதனை. நான் அவரைப் பாராட்டிக்கொண்டே இருப்பேன்.
ஆனால், அவர் 400 விக்கெட்டுகள், 500 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறேன். அது முன்னோக்கி வரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒரு பாதையாக இருக்கும்.
இஷாந்த் குறித்து ஏதேனும் கூற வேண்டுமானால், அவருடைய சிரிப்பு அவருக்கு மிகப் பெரிய பலம். அவர் எப்போதும் புன்னகையுடனே இருப்பார். சோர்வாக இருந்தால்கூட புன்னகையுடன்தான் இருப்பார்.
பந்துவீச வாய்ப்பு கிடைக்காது என அவரிடம் இன்று நகைச்சுவையாகக் கூறினேன். அதற்கு அவர் பரவாயில்லை, நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன் எனப் பதிலளித்தார்."என்றார் அஸ்வின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...