
சென்னை டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளதால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகும் அணி குறித்த ஆர்வம் மேலும் அதிகமாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்க பயணத்தை ஆஸ்திரேலியா ஒத்தி வைத்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக நியூசிலாந்து தகுதி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 1-2 எனத் தோற்றது ஆஸ்திரேலிய அணி. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. இதற்கான ஆஸி. அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் கரோனா அச்சுற்றுதல் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் வெற்றியாளரே, நியூசிலாந்துடன் இறுதி ஆட்டத்தில் மோத முடியும். அதேசமயம் அதற்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன. டெஸ்ட் தொடரை வென்றால் மட்டும் போதாது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டெஸ்டுகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியும்.
சென்னை டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் மூன்று வெற்றிகளைப் பெறுவதற்கான முனைப்பில் உள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி 3-0, 3-1 அல்லது 4-0 என இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால் அந்த அணி இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். இந்திய அணி குறைந்தது 2 வெற்றிகளுடன் டெஸ்ட் தொடரை வென்றால் இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும். தொடா் சமனாகும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி 1 வெற்றி மட்டுமே பெற்றாலோ அல்லது இங்கிலாந்து அணி 2 வெற்றி மட்டும் பெற்றாலோ ஆஸ்திரேலிய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கான வாய்ப்பு
3 - 1
2 - 1
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இங்கிலாந்துக்கான வாய்ப்பு
4 - 0
3 - 0
3 - 1
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியாவுக்கான வாய்ப்பு
இந்தியா - இங்கிலாந்து தொடரில்...
2 (இந்தியா) - 2 (இங்கிலாந்து)
1 - 1
0 - 1
1 - 2
0 - 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.