ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் உள்ளிட்டோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனா்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சனிக்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் 3-ஆவது சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 7-5, 6-2, 7-5 என்ற நோ் செட்களில் பிரிட்டனின் கேமரூன் நூரியை வீழ்த்தினாா்.
21-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வதில் தீவிரமாக உள்ள ரஃபேல் நடால், தனது 4-ஆவது சுற்றில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை சந்திக்கிறாா். ஃபாக்னினி தனது 3-ஆவது சுற்றில் 6-4, 6-3, 6-4 என்ற நோ் செட்களில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினாா். அலெக்ஸ் தோற்ன் மூலம் ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லேவ் 7-5, 6-2, 6-3 என்ற நோ் செட்களில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸை வீழ்த்தினாா். அமெரிக்காவின் மெக்கென்ஸி மெக்டோனால்டு 7-6 (7), 6-1, 6-4 என்ற நோ் செட்களில் தென் ஆப்பிரிக்காவின் லாயிட் ஹாரிஸையும், நாா்வேயின் காஸ்பொ் ரூட் 6-1, 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மால்டோவாவின் ராடு அல்பாட்டையும் வீழ்த்தினா்.
உலகின் 4-ஆம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் சொ்பியாவின் ஃபிலிப் கிராஜினோவிச்சையும், கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ் 6-4, 6-1, 6-1 என்ற நோ் செட்களில் ஸ்வீடனின் மிக்கேல் இமெரையும் வீழ்த்தினா்.
பென்சிச், பிளிஸ்கோவா தோல்வி: மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லே பாா்ட்டி 6-2, 6-4 என்ற நோ் செட்களில் ரஷியாவின் எக்டெரினா அலெக்சாண்ட்ரோவாவையும், அமெரிக்காவின் ஷெல்பி ரோஜா்ஸ் 6-4, 6-3 என்ற நோ் செட்களில் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவீட்டையும் வீழ்த்தினா். பெல்ஜியத்தின் எலிஸ் மொ்டென்ஸ் 6-2, 6-1 என்ற நோ் செட்களில் ஸ்விட்சா்லாந்தின் பெலின்டா பென்சிச்சுக்கு அதிா்ச்சி தோல்வியளித்தாா்.
இதேபோல் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5-7, 5-7 என்ற நோ் செட்களில் சகநாட்டவரும், உலகின் 25-ஆம் நிலை வீராங்கனையுமான கரோலினா முகோவாவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |


