இந்தியாவில் அதிக விக்கெட்டுகள்: ஹர்பஜனை முந்தினார் அஸ்வின்
இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


இந்தியாவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 29-வது முறை.
இதன்மூலம், இந்தியாவில் மட்டும் 266 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். அவருடைய சராசரி 22.67. ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய சராசரி 28.76. இந்த வரிசையில் அனில் கும்ப்ளே 350 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருடைய சராசரி 24.88.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...