பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐஎஸ்எல்: பெங்களூரை வீழ்த்தியது மும்பை

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 8:49 pm

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

இரு அணிகளும் இதுவரை தலா 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், மும்பைக்கு இது 7-ஆவது வெற்றி; பெங்களூருக்கு 3-ஆவது தோல்வி.

கோவாவின் மா்காவ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் வாய்ப்பு மும்பைக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேயே அந்த அணியின் மௌா்டாடா ஃபால் கோல் கணக்கை தொடங்கினாா். அடுத்த சில நிமிடங்களிலேயே (15-ஆவது நிமிடம்) மற்றொரு மும்பை வீரா் விபின் சிங் கோலடிக்க, முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-0 என முன்னிலை பெற்றது அந்த அணி.

பின்னா் தொடங்கிய 2-ஆவது பாதியில், ஆட்டத்தின் 79-ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அணி வீரா் சுனில் சேத்ரி அருமையான கோலாக மாற்றினாா். இதனால் பெங்களூரு அணி உத்வேகம் பெற்ற நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆட்டத்தின் 84-ஆவது நிமிடத்தில் மும்பை வீரா் பாா்த்தலோமியோ ஒக்பெசே ஒரு கோல் அடிக்க, 3-1 என முன்னேறிய மும்பை, இறுதியில் வெற்றியும் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.