கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சக வீரர்களை தொடர்ச்சியாக ரன் அவுட் ஆக்கும் ஜடேஜா: புள்ளி விவரம்

​இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா எதிரணி வீரர்கள் அல்லாமல் சக வீரர்களையும் ரன் அவுட் செய்வதில் வல்லவராக இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 2:40 pm

DIN


இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா எதிரணி வீரர்கள் அல்லாமல் சக வீரர்களையும் ரன் அவுட் செய்வதில் வல்லவராக இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரிகிறது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்தை சிறப்பான த்ரோவால் ரன் அவுட் செய்தார் ஜடேஜா. இந்த ரன் அவுட் அனைவராலும் பரவலாகப் பாராட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங்கின்போது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜாஸ்பிரீத் பூம்ரா ஆகியோரது ரன் அவுட்டுக்கும் ஜடேஜா காரணமாகத் திகழ்ந்துள்ளார்.

ரன் ஓடுவதில் வல்லவராகத் திகழும் ஜடேஜா, எதிர் திசையில் உள்ள பேட்ஸ்மேன்களின் ரன் ஓடும் திறன்களை மறந்துவிடுகிறாரா என்பது தெரியவில்லை.

Story image

அஸ்வினுடன் ஏராளமான டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றாக விளையாடியும் அவரைப் பற்றிய புரிதல் இல்லாமல், அவசர ரன்னுக்காக அஸ்வினை அழைத்தார் ஜடேஜா. விளைவு அஸ்வின் ஆட்டமிழந்தார்.

Story image

பூம்ராவுடனும் இதேநிலை தான். 2-வது ரன் எடுக்க ஜடேஜா முயற்சிக்க எதிர் திசையில் பூம்ரா ரன் அவுட் ஆனார்.

Story image

ஜடேஜாவின் ஓட்டத்தினை அறிந்த ஆஸ்தரேலிய வீரர்கள் அவரைக் குறி வைக்காமல், எதிர் திசையில் உள்ள பேட்ஸ்மேன்களை வீழ்த்தினர்.

Story image

புள்ளி விவரம்:

73 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடியுள்ள ஜடேஜா 20 முறை ரன் அவுட்டுக்குக் காரணமாக இருந்துள்ளார். இதில் 13 முறை எதிர் திசையிலுள்ள வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர். 7 முறை மட்டுமே ஜடேஜா ரன் அவுட் ஆகியுள்ளார்.

இதைக் கணக்கிட்டால் ஒவ்வொரு 3.5 இன்னிங்ஸுக்கு ஒரு முறை ரன் அவுட்டுக்குக் காரணமாக இருக்கிறார் ஜடேஜா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.