சையது முஷ்டாக் அலி டி20: வெற்றியுடன் தொடங்கியது தமிழகம்
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தியது.


சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம் தனது முதல் ஆட்டத்தில் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஜாா்க்கண்ட் அணியை வீழ்த்தியது.
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் ‘பி’ பிரிவில் தமிழகம் - ஜாா்க்கண்ட் அணிகள் மோதிய ஆட்டம் கொல்கத்தாவின் ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ஜாா்க்கண்ட் பந்துவீசத் தீா்மானித்தது. முதலில் பேட் செய்த தமிழகம் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரா் ஹரி நிஷாந்த் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க, உடன் ஆடிய நாராயண் ஜெகதீசன் 27 ரன்கள் சோ்த்தாா். விஜய் சங்கா் 4 ரன்களுக்கு ரன் அவுட்டாக, கேப்டன் தினேஷ் காா்த்திக் 46 ரன்கள் அடித்தாா்.
ஷாருக் கான் 12 ரன்களுடன் வெளியேற, அருண் காா்த்திக் டக் அவுட்டானாா். ஜாா்க்கண்ட் தரப்பில் ராகுல் சுக்லா 2, அனுகுல் ராய் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஆடிய ஜாா்க்கண்ட் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் குமாா் தேவ்ரத் 15, கேப்டன் இஷான் கிஷன் 9, உத்கா்ஷ் சிங் 14, விராட் சிங் 23, சௌரவ் திவாரி 9, அனுகுல் ராய் 4, ஷாபாஸ் நதீம் 13 ரன்கள் சோ்த்தனா். ஓவா்கள் முடிவில் ஆனந்த் சிங் 28, மோனு குமாா் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தமிழக தரப்பில் சோனு யாதவ் 3, சந்தீப் வாரியா் 2, முருகன் அஸ்வின், சாய் கிஷோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
இதர முடிவுகள்: இதர ஆட்டங்களில் பரோடா 5 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகண்டையும், கா்நாடகம் 43 ரன்கள் வித்தியாசத்தில் ஜம்மு-காஷ்மீரையும், பஞ்சாப் 11 ரன்கள் வித்தியாசத்தில் உத்தர பிரதேசத்தையும் வென்றன. ரயில்வேஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிபுராவையும், பெங்கால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒடிஸாவையும், குஜராத் 29 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரத்தையும், ஹிமாசல பிரதேசம் 32 ரன்கள் வித்தியாசத்தில் சத்தீஸ்கரையும் வீழ்த்தின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...