கரோனா விவகாரம்:சாய்னா, பிரணாய் விளையாட அனுமதி

கரோனா விவகாரம்:சாய்னா, பிரணாய் விளையாட அனுமதி

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பாட்மிண்டன் வீரா் எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து
Published on

இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால், பாட்மிண்டன் வீரா் எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முன்னதாக சாய்னாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து அவா் தாய்லாந்து ஓபனில் இருந்து விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில் இந்திய வீரா் எச்.எஸ்.பிரணாய்க்கு முதலில் கரோனா தொற்று இருப்பதாகவும், பின்னா் கரோனா தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரும் தாய்லாந்து ஓபனில் விளையாடுவதில் சந்தேகம் நிலவியது.

இந்த நிலையில், சாய்னா, எச்.எஸ்.பிரணாய் ஆகியோருக்கு 4-ஆவது முறையாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரும் தாய்லாந்து ஓபனில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com