இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

குறைந்த வயதில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இணைந்த ரபாடா!

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2021, 6:21 am

DIN

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி 14 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. அந்த அணிக்கு குவிண்டன் டி காக் தலைமையேற்றுள்ளாா்.

கராச்சியில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்பிறகு விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் பட்டியலில் ரபாடா இணைந்துள்ளார். குறைந்த வயதில் மற்றும் குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் ரபாடவுக்கும் ஓர் இடம் கிடைத்துள்ளது. தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடா எந்தளவுக்குச் சாதித்து வருகிறார் என்பதை இந்தப் பட்டியல் வெளிப்படுத்துகிறது. 

குறைந்த வயதில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள்

வக்கார் யூனுஸ் - 38 டெஸ்டுகள் - 24 வருடம் 26 நாள்கள்
கபில் தேவ் - 50 டெஸ்டுகள் - 24 வருடம் 68 நாள்கள்
ஹர்பஜன் சிங் - 46 டெஸ்டுகள் - 25 வருடம் 74 நாள்கள்
ரபாடா - 44 டெஸ்டுகள் - 25 வருடம் 248 நாள்கள்

குறைந்த பந்துகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள்

வக்கார் யூனுஸ் - 7730 பந்துகள்
டேல் ஸ்டெய்ன் - 7848 பந்துகள்
ரபாடா - 8154 பந்துகள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.