காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பழனி முருகன் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானது...

News image
Updated On :30 ஜனவரி 2021, 7:41 am

DIN

பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் கிரிக்கெட் வீரர் நடராஜன்.

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சோ்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றாா். அங்கு டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானார். பின்னா் கடந்த வாரம் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பினாா். இளைஞா்கள், ஊா் பொதுமக்கள் நடராஜனுக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனா். இரண்டு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஏற்றப்பட்ட நடராஜன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் நடுவே ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்ற நடராஜன், தேசியக் கொடிக்கு முத்தமிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாா்.

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமானது, மகள் பிறந்தது என சமீபகாலமாக ஏராளமான நல்ல தருணங்களைப் பெற்றுள்ள நடராஜன், பழனி முருகன் கோயிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.