புஜாரா இடத்தில் பிரித்வி ஷா: ஆஸி. முன்னாள் வீரர் யோசனை
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேத்தேஷ்வர் புஜாரா இடத்தில் பிரித்வி ஷாவைக் களமிறக்கலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் யோசனை தெரிவித்துள்ளார்.


இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் சேத்தேஷ்வர் புஜாரா இடத்தில் பிரித்வி ஷாவைக் களமிறக்கலாம் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் 3-வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் சேத்தேஷ்வர் புஜாரா கடந்த சில நாள்களாக பெரிய ஸ்கோரைக் குவிக்க திணறி வருகிறார். சமீபத்தில் முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில்கூட அவர் இரண்டு இன்னிங்ஸிலும் முறையே 8 மற்றும் 15 ரன்களையே எடுத்தார்.
இதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புஜாராவுக்குப் பதில் மாற்று வீரர் களமிறக்கப்பட வேண்டும் என்ற கருத்து பெருமளவில் வலுத்து வருகிறது.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக்கிடம், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் புஜாராவுக்குப் பதில் கேஎல் ராகுல் களமிறக்கப்படலாமா என்று சுட்டுரையில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து ஹாக் கூறியது:
“புஜாராவுக்குப் பதில் மாற்று வீரர் களமிறக்கப்படுகிறார் என்றால் அது பிரித்வி ஷாவாக இருக்க வேண்டும். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவதைக் காட்டிலும் இந்த இடத்துக்கு ஏற்ற வீரர். அவரிடம் நிறைய திறமையும், நீண்ட எதிர்காலமும் உள்ளது. இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இல்லை, ஆனால் வெளியிலிருந்து ஒரு வீரர் சேர்க்கப்படுவதற்கான தேர்வாக அவர் இருப்பார்.”
இலங்கையில் நடைபெறவுள்ள தலா 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பிரித்வி ஷா தற்போது இலங்கையில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...