யூரோ கோப்பை: இங்கிலாந்தை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஹேரி கேன்

யூரோ கோப்பை அரையிறுதிச்சுற்றில் 2-1 என டென்மார்க்கைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி.
யூரோ கோப்பை: இங்கிலாந்தை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஹேரி கேன்

யூரோ கோப்பை அரையிறுதிச்சுற்றில் 2-1 என டென்மார்க்கைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி.

உலகின் 4-ம் நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி, யூரோ கோப்பை போட்டியில் 10 முறை பங்கேற்றும் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் ஆனதில்லை. கடந்த 55 ஆண்டுகளாக எந்தவொரு பிரதான போட்டியிலும் சாம்பியன் ஆகாத நிலையில், தற்போது சொந்த மண்ணில் யூரோ கோப்பை சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ளது. நடப்பு சீசனில் குரூப் சுற்றில் 3 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இங்கிலாந்து, நாக் அவுட் சுற்றில் ஜொ்மனியை வீழ்த்தியது. இது இங்கிலாந்து சிறப்பாக முன்னேறியிருப்பதற்கான சான்றாக உள்ளது. பின்னா் உக்ரைனை ஊதித் தள்ளிவிட்டு அரையிறுதிக்கு வந்த அந்த அணி, 5 ஆட்டங்களிலும் எதிரணியை கோலடிக்க விடாமல் செய்துள்ளது.

உலகின் 12-ம் நிலையில் இருக்கும் டென்மாா்க், யூரோ கோப்பை போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் ஆகும் முனைப்பில் இருந்தது. குரூப் சுற்றில் ஒரு வெற்றியைப் பதிவு செய்து, நாக் அவுட் சுற்றில் வேல்ஸையும், காலிறுதியில் செக் குடியரசையும் வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது. டென்மாா்க். 

லண்டனில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவில் சிறப்பாக விளையாடியது இங்கிலாந்து அணி. எனினும் 30-வது நிமிடத்தில் கோலடித்து முன்னணியில் இருந்தது டென்மார்க். 25 மீ. தொலைவில் இருந்து ஃப்ரீ கிக் மூலம் அற்புதமான கோலடித்தார் மைக்கேல் டேம்ஸ்கார்ட். இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அடிக்கப்பட்ட முதல் கோல். அடுத்த 9-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் சைமனின் தவறால் ஒரு கோலடித்து சமன் செய்தது இங்கிலாந்து. 2-வது பாதியில் கோலடிக்க இரு அணிகளும் கடுமையாகப் போராடின. ஆனால் கோல் எதுவும் விழவில்லை. ஆட்டம் 1-1 என சமன் ஆனது. கூடுதல் நேரத்தில் 104-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோலடித்தார் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன். இதனால் 2-1 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.  

முதல்முறையாக யூரோ கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து அணி. 1966 உலகக் கோப்பையை வென்றபிறகு 55 வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பெரிய போட்டியில் சாம்பியன் ஆகும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தின் கனவை இத்தாலி தகர்க்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com