ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஹர்பஜன் சிங்குக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஹர்பஜன் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

News image
ஹர்பஜன் சிங்குக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து
Updated On :10 ஜூலை 2021, 11:25 am

DIN

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பாக பங்கேற்ற ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக தமிழில் பதிவு செய்தது ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததன. அவரை திருவள்ளூர் போல் ரசிகர்கள் சித்தரித்திருந்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

தமிழில் பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணைந்து 'ஃப்ரெண்ட்ஷிப்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் சந்தானத்துடன் இணைந்து 'டிக்கிலோனா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன.

இந்த வருட ஐபிஎல் போட்டியில் அவர் கொல்கத்தா அணி சார்பாக பங்கேற்றார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் தனது மனைவி கீதாவும், குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். 

ஹர்பஜனுக்கும் அவரது மனைவி கீதாவுக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஹினயா என்ற மகள் உள்ள நிலையில், இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.