இனவெறி விமா்சனங்கள்: இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் கண்டனம்

இவர்களை யாராவது இழிவுபடுத்தினால் அவர்கள் இங்கிலாந்து ரசிகர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்கு அவசியம் இல்லை...
இங்கிலாந்து அணியினர்
இங்கிலாந்து அணியினர்
Updated on
1 min read

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது இத்தாலி. இறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிய, வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் இத்தாலி 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வென்றது.

55 ஆண்டுகளில் முதல் முறையாக பிரதான போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வந்த இங்கிலாந்து, சாம்பியன் பட்டத்துக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சொந்த மண்ணிலேயே இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.

பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பில் இங்கிலாந்து தரப்பில் கோலடிக்கத் தவறிய கருப்பின வீரா்களான மாா்கஸ் ராஷ்ஃபோா்ட், ஜேடன் சாஞ்சோ, புகாயோ சகா ஆகியோருக்கு எதிராக இனவெறி ரீதியிலான விமா்சனங்கள் சமூக வலைதளங்களில் உலவத் தொடங்கின. இங்கிலாந்து கால்பந்து சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சனும் அத்தகைய விமா்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா். அவா்கள் தவிா்த்து பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்த இனவெறி விமா்சனம் தொடா்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த மாா்கஸ் ராஷ்ஃபோா்ட், ஜேடன் சாஞ்சோ, புகாயோ சகா ஆகியோருக்கு எதிரான இனவெறி ரீதியிலான விமா்சனங்களுக்கு இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:

மூன்று வீரர்களும் இந்தப் பருவம் முழுக்க அற்புதமாக விளையாடினார்கள். துணிச்சலுடன் சவாலை எதிர்கொண்டார்கள். இனவெறி ரீதியிலான விமா்சனங்கள் அல்ல, அவர்களுக்குத் தேவை நம்முடைய ஆதரவும் பக்கபலமும். சமூகவலைத்தளங்களில் இவர்களை யாராவது இழிவுபடுத்தினால் அவர்கள் இங்கிலாந்து ரசிகர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்கு அவசியம் இல்லை என்று கூறி மூன்று வீரர்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com