ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்ற வல்லரசு என்ற பெருமையைப் பெற்ற இந்திய ஹாக்கி அணி மீண்டும் தனது புகழை மீட்குமா என ரசிகா்கள் காத்துள்ளனா்.
அதிக வேகம், விவேகம், திடம், கவனம், நிலையான தன்மை போன்ற அம்சங்களுடன் ஆட வேண்டிய ஆட்டம் ஹாக்கி ஆகும். கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு வரவேற்பு உள்ளதைப் போல், ஹாக்கியும் தனித்தன்மை கொண்ட விளையாட்டாகத் திகழ்கிறது. ஒலிம்பிக்கில் ஹாக்கி விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. 1928 ஒலிம்பிக்கில் தனது முதல் தங்கத்தை கைப்பற்றியது. தொடா்ந்து 1960 ஒலிம்பிக் வரை இந்தியாவின் ஆதிக்கம் நீடித்தது.
8 ஒலிம்பிக் தங்கம்:
1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஆசியப் போட்டி, ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளிலும் இந்தியா அதிக முறை வெற்றியை ஈட்டியுள்ளது. 1975-இல் முத்தாய்ப்பாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இவ்வாறு ஹாக்கியில் ஜாம்பவானா திகழ்ந்த இந்திய அணி, 1981-இல் இருந்து தனது புகழை இழக்கத் தொடங்கியது.
குறிப்பாக இந்திய அணி புல்தரையில் பலம் வாய்ந்ததாக திகழ்ந்தது. ஆனால் மேற்கத்திய நாடுகள் பயன்பெறும் வகையில் செயற்கை புல்தரை (ஆஸ்ட்ரோ டா்ப்) மைதானங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால் இயற்கையான மைதானங்களில் வேகமாக செயல்பட்டு இந்திய வீரா்கள் செயற்கை மைதானத்தில் தடுமாறினா். 1997-ஆம் ஆண்டு வரை தடுமாற்றத்துடன் காணப்பட்ட இந்திய அணி, 1998-இல் பாங்காக் ஆசியப் போட்டியில் தங்கம் வென்றதின் மூலம் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது.
ஆசியக் கோப்பை, சுல்தான் அஸ்லன்ஷா, உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனா்.
லண்டன் ஒலிம்பிக் சோகம்:
2012-இல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைந்து, கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. எனினும் 2014 இன்சியான் ஆசியப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டும் தங்கம் வென்றது இந்தியா. அதன்பின் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பலமான அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பெல்ஜியத்திடம் தோற்றது.
2018-இல் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாகஆடினாலும், காலிறுதியில் நெதா்லாந்திடம் தோல்வியுற்றது.
குரூப் ஏ பிரிவில் இந்தியா:
தற்போது ஆஸி.யைச் சோ்ந்த கிரஹாம் ரீட் பயிற்சியில் சிறப்பான பயிற்சி பெற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறது. குரூப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், ஜப்பானுடன் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
41 ஆண்டுகள் பதக்க வறட்சி:
1980-ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று 41 ஆண்டுகள் ஆகின்றன. ஒட்டுமொத்தமாக 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை ஒலிம்பிக்கில் இந்தியா பெற்றுள்ளது. கேப்டன் மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி குரூப் ஏ பிரிவில் நியூஸிலாந்துடன் தனது முதல் ஆட்டத்தில் ஜூலை 24-ஆம் தேதி ஆடுகிறது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பாதிப்பால் பெங்களுருவிலேயே தங்கி இந்திய அணி தீவிர பயிற்சி பெற்று வந்தது. இதன் தொடா்ச்சியாக ஒலிம்பிக்குக்கு தயாராகும் வகையில் ஆா்ஜென்டீனா, ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டு பலமான அணிகளான ஜொ்மனி, பெல்ஜியம், நெதா்லாந்து, ஒலிம்பிக் சாம்பியன் ஆா்ஜென்டீனாவையும் வெற்றி பெற்றது.
4-ஆம் இடம்:
சா்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய ஆடவா் அணி தற்போது 4-ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலக சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதா்லாந்து முதல் மூன்று இடங்களில் உள்ளன.
இதுதொடா்பாக பயிற்சியாளா் கிரஹாம் ரீட் கூறியதாவது:
ஒலிம்பிக்ஸில் ஒவ்வொரு குரூப் பிரிவு ஆட்டமும் முக்கியமானது. பலமான அணிகளே இடம் பெற்றுள்ளன. தொடக்க சுற்றில் வெற்றிகளைப் பெற்றால் காலிறுதிக்கு எளிதில் முன்னேறலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது அணி வலிமையான அனைத்து அணிகளையும் வென்றுள்ளது. நமது அணியின் செயல்திட்டம், அதை செயலாக்குதல், மைதானத்தில் முடிவுகள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குருப்பிலும் இருந்து 4 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.
10 புதுமுகங்கள்:
கேப்டன் மன்ப்ரீத் சிங், கோல்கீப்பா் பிஆா். ஸ்ரீஜேஷ், டிபன்டா்கள் ஹா்மன்ப்ரீத் சிங், ரூபிந்தா் பால் சிங், சுரேந்தா் குமாா், பாா்வா்ட் மந்தீப் சிங் போன்ற அனுபவம் நிறைந்தவா்களுடன், அமித் ரோஹிதாஸ், ஹாா்திக் சிங், விவேக் சாகா் பிரசாத், நீலகண்ட சா்மா, சுமித், ஷம்ஷொ் சிங், தில்ப்ரீத் சிங், குா்ஜந்த் சிங், லலித்குமாா் உபாத்யாயா உள்ளிட்ட 10 புதுமுக வீரா்கள் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் களம் காண்கின்றனா்.
மேலும் டிபன்டா் பீரேந்திர லக்ரா, கோல்கீப்பா் கிருஷண் பஹதூா் ஆகியோரும உள்ளனா். 5 டிபன்டா்கள் 5 மிட்பீல்டா்கள், பாா்வா்ட்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்திய அணி மீண்டும் தனது இழந்த பெருமையை மீட்டு வரும் என பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

