செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததால் உண்டான சர்ச்சைகளையடுத்து பிரபல டென்னிஸ் வீராங்கனை ஒசாகா, பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஒசாகா, சமீபத்தில் 2020 யு.எஸ். ஓபன் மற்றும் 2021 ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றார்..
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பினால் தனக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்கவுள்ளதாக அவர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரெஞ்சு ஓபன் போட்டி நிர்வாகம், ஒசாகாவின் நடவடிக்கைக்கு 15,000 டாலர் அபராதம் விதித்தது. முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்ததால் இந்த நிலை அவருக்கு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பைத் தவிர்த்தால் விளைவுகள் ஏற்படும் என்றும் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் நிர்வாகங்களும் எச்சரித்தன.
இதையடுத்து தன்னால் கவனச்சிதறல் ஏற்பட வேண்டாம் என்று கூறி இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து விலகியுள்ளார் ஒசாகா. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
என்னுடைய பிரச்னையைச் சரியான நேரத்தில், இன்னும் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதால் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தேன். பிரெஞ்சு ஓபன் போட்டியிலிருந்து நான் விலகுவதால் மற்ற வீரர்கள் விளையாட்டில் கவனம் செலுத்த முடியும். யு.எஸ். ஓபன் 2018 முதல் மன அழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளேன். அதைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். பொதுவெளியில் என்னால் இயல்பாகப் பேச முடியாது. செய்தியாளர் சந்திப்புக்கு முன்பு எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. அதனால் தான் பிரெஞ்சு ஓபன் போட்டியில் செய்தியாளர் சந்திப்பைத் தவிர்க்க நினைத்தேன். சரியான நேரத்தில் போட்டி நிர்வாகங்களுடன் இதுபற்றி விவாதிப்பேன் என்று கூறியுள்ளார்.
விளையாட்டு வணிகப் பத்திரிகையான ஸ்போர்டிகோ சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 400 கோடி (55.2 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 23 வயது ஒசாகா. இதில் 37.68 கோடி (5.2 மில்லியன் டாலர்), டென்னிஸ் போட்டிகளில் கிடைத்த பரிசுத்தொகையாகக் கிடைத்துள்ளது. இதர வருமானம் விளம்பரங்கள் வழியாகக் கிடைத்துள்ளன. இதனால் அதிக வருமானம் ஈட்டும் வீராங்கனை என்கிற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்டர் மியாமியின் புதிய திடலில் கோல் அடித்த மெஸ்ஸி..! 5 போட்டிகளிலும் தோல்வியுறாமல் ஆதிக்கம்!

Vote For TVK! ரசிகர்களுக்கு பதிலளித்த நடிகர் ஜெய்!
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

தப்பா முடிவு பண்ணீங்கனா பனையூர் வாசலில் நிற்க வேண்டியிருக்கும்: பெரம்பூரில் அன்புமணி பிரசாரம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


