கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரெஞ்சு ஓபன்: செரீனா வில்லியம்ஸ் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:20 am

DIN

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் போட்டியில் கஸகஸ்தானைச் சேர்ந்த எலீனா, 6-3, 7-5 என நேர் செட்களில் செரீனாவைத் தோற்கடித்து காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு எலீனா தகுதி பெற்றுள்ளார். 

இந்தத் தோல்வியினால் செரீனாவின் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார். ஆனால் அந்த ஒரு பட்டத்துக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

கடைசி நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளிலும் தோற்றுள்ளார் செரீனா. கடந்த வருடம் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்தார். காயத்தால் பிரெஞ்சு ஓபன் போட்டியில் முதல் சுற்றுக்குப் பிறகு வெளியேறினார். 2021 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் ஒசாகா, செரீனா வில்லியம்ஸை அரையிறுதியில் வீழ்த்தினார். இப்போது பிரெஞ்சு ஓபன் போட்டியில் 4-வது சுற்றில் தோல்வியடைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.