நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து முதலில் பேட்டிங், மற்றொரு நியூசி. வீரர் விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

News image

ஜோ ரூட்

Updated On :10 ஜூன் 2021, 9:41 am

DIN

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கிய இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் இன்று தொடங்கியுள்ளது. 

காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் விலகியுள்ளார்கள். இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்படுகிறார். காயம் காரணமாக 2-வது டெஸ்டிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங்கும் இன்று அறிவித்துள்ளார். வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங்கும் வாட்லிங்குக்குப் பதிலாக டாம் பிளெண்டல்லும் நியூசி. அணியில் தேர்வாகியுள்ளார்கள். 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.