நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-ம் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18 முதல் தொடங்கியுள்ளது. சௌதாம்ப்டனில் நேற்று மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானது. எனினும் இந்த டெஸ்டில் கூடுதலாக ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளதால் மழையால் ஆட்ட முடிவில் பாதிப்பு ஏற்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மழை இல்லாததால் ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. இன்று 98 ஓவர்கள் வீசப்படவுள்ளன.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளருக்கு இடமில்லை.
இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் இந்திய அணிக்கு அற்புதமான தொடக்கத்தை அளித்தார்கள். 20 ஓவர்கள் வரை இருவரையும் பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினார்கள். எனினும் ரோஹித் சர்மாவை 34 ரன்களில் வீழ்த்தினார் ஜேமிசன். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் சர்மாவும் கில்லும் 62 ரன்கள் எடுத்தார்கள். நன்கு விளையாடி வந்த கில், வாக்னர் வீசிய முதல் ஓவரில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 6 ரன்களுடனும் புஜாரா ரன்கள் எடுக்காமலும் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

பிக்பாஸ் பிரபலம் மீது தாக்குதல்: கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் மீது போலீஸில் புகார்!

பாஜகவுடன் கூட்டணி வைத்த திமுக: அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? - இபிஎஸ் பிரசாரம்

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


