தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடம்

ஆல்-ரௌண்டர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

News image
Updated On :23 ஜூன் 2021, 11:50 am

DIN


ஆல்-ரௌண்டர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஆல்-ரௌண்டர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் 28 புள்ளிகளை இழந்துள்ளார். இதன்மூலம், ரவீந்திர ஜடேஜா 386 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2017-க்குப் பிறகு ஜடேஜா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் பேட்டிங் தரவரிசையில் 18 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 1 இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.