இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஒரே நாளில் அதிக ரன்கள் முன்னிலை பெற்று நியூசிலாந்தை வீழ்த்த முடியுமா?: ஷமி பதில்

இங்கிலாந்தில் உள்ள சூழலில் எதுவும் சாத்தியம். நியூசிலாந்தின்...

News image
Updated On :23 ஜூன் 2021, 7:33 am

DIN

நியூசிலாந்தை வீழ்த்த நாங்கள் அதிக ரன்கள் முன்னிலை பெற வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியுள்ளார். 

சௌதாம்டனில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள், மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுக்க, வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று இந்தியா 89 ஓவா்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றைய தினமும் வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடிக்கப்பட்டபோது நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. 4-ம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று, நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது இந்தியா. அந்த அணியின் பேட்டிங் வரிசையை ஷமி, இஷாந்த் தங்களது வேகத்தால் சரித்தனா். நியூசிலாந்தின் முக்கிய விக்கெட்டாக இருந்த கேன் வில்லியம்சனை 49 ரன்களில் இஷாந்த் வீழ்த்தினாா். முதல் இன்னிங்ஸில் நியூசி. அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது. ஷமி நான்கு விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 5-ம் நாள் இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 30 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

மழை காரணமாகக் கூடுதல் நாளான இன்றும் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி கூறியதாவது:

நாங்கள் முடிந்தளவு அதிக ரன்கள் எடுத்து அவர்களை எப்போது பேட்டிங் செய்யச் சொல்லவேண்டும் எனப் பார்க்கவேண்டும். இங்கிலாந்தில் உள்ள சூழலில் எதுவும் சாத்தியம். நியூசிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் எடுக்க கால அவகாசம் தேவை. இதற்குச் சரியான திட்டங்கள் வேண்டும். அதற்கு முதலில் நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.