மே.இ. தீவுகள் - தெ.ஆ. டி20: கடைசிப் பந்தில் சிக்ஸர், 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி!

கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தும் மே.இ. தீவுகள் அணியால் இலக்கை அடைய முடியாமல் போனது...
டி காக்
டி காக்


மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டெஸ்டுகள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது தென் ஆப்பிரிக்க அணி. டெஸ்ட் தொடரை 2-0 என தெ.ஆ. அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செயின்ட் ஜார்ஜில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். ஒபட் மெக்காய் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதன்பிறகு விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பரபரப்பான கடைசிக்கட்டத்தில் கடைசி ஓவரில் மே.இ. தீவுகள் அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட்டது. ரபாடா நன்கு பந்துவீசி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தும் மே.இ. தீவுகள் அணியால் இலக்கை அடைய முடியாமல் போனது. 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த ஷம்சி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com