சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.
இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ்.
ஒரு வீராங்கனையாகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ். 1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 211 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
2005, 2017 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய பெருமையும் மிதாலி ராஜுக்கு உண்டு.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது 21-வது வருடத்தைக் கடந்த ஜூன் மாத இறுதியில் பூர்த்தி செய்தார் மிதாலி. இவ்வளவு காலம் வேறு எந்த வீராங்கனையும் சர்வதேச கிரிக்கெட்டில் நீடித்ததில்லை என்பதே அவருடைய பெருமையை நன்கு உணர்த்தும். 1999, ஜூன் 26 அன்று, 16 வயதில் அயர்லாந்து அணிக்கு எதிராகச் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மிதாலி ராஜ். ஜெட் வேகத்தில் 21 வருடங்கள் ஓடிவிட்டன.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 36 ரன்களை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் மிதாலி ராஜ்.
சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லோட் எட்வர்ட்ஸ் முதல் வீராங்கனையாக 10,000 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 309 ஆட்டங்களில் 10,273 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் - 10,001 ரன்கள், சராசரி - 46.73
டெஸ்டுகள்: 663 ரன்கள், சராசரி 51.00
ஒருநாள்: 6974 ரன்கள், சராசரி 50.53
டி20: 2364 ரன்கள், சராசரி 37.52
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



