கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இந்திய அணிக்கு 20 சதவிகிதம் அபராதம்

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2021, 2:24 pm

DIN


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் குறிப்பிட்ட நேரத்தில் இந்திய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியதையடுத்து ஆட்ட நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் இந்திய அணிக்கு அபராதம் விதித்துள்ளார். இந்திய கேப்டன் கோலி தவறை ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்ததையடுத்து, இதுபற்றி மேற்கொண்டு விசாரணை நடைபெறவில்லை.

இரு அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.