ஷெபாலி, ரிச்சா அதிரடி: இந்திய மகளிர் அணி 158 ரன்கள் குவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய மகளிர், தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் லக்னௌவில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தானா 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஷெபாலி வர்மா மற்றும் ஹர்லீன் தியோல் பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில் ஷெபாலி 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தியோலும் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடி காட்ட இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களைக் கடந்தது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிச்சா 44 ரன்கள் சேர்த்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...