2-வது ஒருநாள்: இந்தியா முதலில் பேட்டிங், ரிஷப் பந்த் தேர்வு!
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது.
முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இங்கிலாந்து அணியில் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள கேப்டன் மார்கனுக்குப் பதிலாக மலான் அணியில் இடம்பெற்றுள்ளார். லியம் லிவிங்ஸ்டோன் அறிமுகமாகியுள்ளார். மார்க் வுட்டுக்குப் பதிலாக ரீஸ் டாப்லி தேர்வாகியுள்ளார். பட்லர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...