கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

என்னவாகும் சாய்னா நெவாலின் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவு?: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி ஒத்திவைப்பு

தில்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:11 pm

DIN

கரோனா பாதிப்பு காரணமாக மலேசிய ஓபன் சூப்பர் 750 பாட்மிண்டன் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கோலா லம்பூரில் நடைபெற இருந்த மலேசிய ஓபன் சூப்பர் 750 போட்டி, கரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மலேசிய ஓபன் போட்டி மே 25 முதல் 30 வரை நடைபெற இருந்தது. இந்தப் போட்டி ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிப் போட்டியாகவும் இருந்தது. 

தில்லியில் நடைபெற இருந்த இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது. 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவதற்காக எஞ்சியிருந்த 3 போட்டிகளில் தற்போது 2 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, ஜூன் 1 முதல் 6 வரை சிங்கப்பூர் ஓபன் போட்டி நடைபெறவுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு சிங்கப்பூர் தடை விதித்துள்ளது. இந்தச் சூழல், ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான முயற்சியில் உள்ள சாய்னா நெவால், ஸ்ரீகாந்த் ஆகிய இந்தியர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. 

பி.வி. சிந்து, சாய் பிரணீத், ஆடவர் இரட்டையர்கள் சிராக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஆகிய இந்திய பாட்மிண்டன் வீரர்கள் ஏற்கெனவே ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.