தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்களில் அறிமுகமாகும் 17 வயது ஷஃபாலி வர்மா!

ஒருநாள், டெஸ்ட் அணிகளில் 17 வயது ஷாஃபாலி வர்மா முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்.

News image
Updated On :15 மே 2021, 8:25 am

DIN

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா - ஒருநாள், டெஸ்ட் அணிகளில் இடம்பிடித்துள்ளார். இதுதவிர ஹண்ட்ரெட், டபிள்யூபிபிஎல் போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகளையும் பெற்றுள்ளார்.  

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய மகளிர் அணி, ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள், டெஸ்ட் அணிகளில் 17 வயது ஷாஃபாலி வர்மா முதல்முறையாக இடம்பிடித்துள்ளார்.

ஹரியாணாவைச் சேர்ந்த ஷாஃபாலி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 15 வயதில் அறிமுகமானபோது இந்தியாவுக்காக விளையாடும் இளம் வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றார். இதுவரை 22  டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்து அசத்தினார். 

அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற ஷாஃபாலியை ஒருநாள், டெஸ்ட் அணிகளிலும் இடம்பெறச் செய்து கூடுதல் பொறுப்புகளையும் வாய்ப்புகளையும் அளித்துள்ளது பிசிசிஐ.

இங்கிலாந்தில் விரைவில் நடைபெறவுள்ள ஹண்ட்ரெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டபிள்யூபிபிஎல் டி20 போட்டியிலும் விளையாடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளார் ஷஃபாலி வர்மா. டபிள்யூபிபிஎல் டி20 போட்டியில் அறிமுகமாகும் ஷாஃபாலி, சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். 

குறுகிய காலத்தில் பல முக்கிய வாய்ப்புகளைப் பெற்றுள்ள ஷஃபாலி வர்மா, தற்போது கிடைத்துள்ள நான்கு வாய்ப்புகளையும் எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதை கிரிக்கெட் உலகம் ஆர்வத்துடன் கவனிக்கப் போகிறது. டி20 ஆட்டங்களில் அசத்தி வருவது போல இதர கிரிக்கெட் போட்டிகளிலும் ஷஃபாலி முத்திரை பதிப்பார் என்றே நம்பலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.