கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பிரெஞ்சு ஓபன் முதல் சுற்றுக்கு முன்னேறுவார்களா நான்கு இந்தியர்கள்?

சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா என நான்கு இந்தியர்கள் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.

News image
அங்கிதா
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

DIN

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று பாரிஸ் நகரில் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா என நான்கு இந்தியர்கள் தகுதிச்சுற்றுப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.

சுமித் நாகல் இத்தாலியின் ராபர்டோவுக்கு எதிராகவும் பிரஜ்னேஷ் ஜெர்மனியின் ஆஸ்கருக்கு எதிராகவும் ராம்குமார் அமெரிக்காவின் மைக்கேலுக்கு எதிராகவும் அங்கிதா ரெய்னா ஆஸ்திரேலியாவின் அரினாவுக்கு எதிராகவும் மோதவுள்ளார்கள். 

23 வயது சுமித் நாகல் இதுவரை பிரெஞ்சு ஓபன் போட்டியின் முதல் சுற்றில் விளையாடியதில்லை. 2020 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோற்ற பிறகு தகுதிச்சுற்றுப் போட்டியைத் தாண்டி பிரஜ்னேஷ் முன்னேறியதில்லை. 2019-ல் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகளிலும் அவர் பங்கேற்றார். ஆனால் ராம்குமாரும் அங்கிதாவும் இதுவரை எந்தவொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் சுற்றுக்கும் தகுதிபெற்றதில்லை. 

இதனால் இந்த வருடம் நான்கு இந்தியர்களும் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் எப்படி விளையாடி முதல் சுற்றுக்கு முன்னேறப் போகிறார்கள் என்பதை இந்திய டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.