கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை: தயாா்நிலை முகாமுக்கான இந்திய அணியில் தமிழக வீரா்

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் இந்திய அணிக்கு தமிழக வீரா் மாரீஸ்வரன் சக்திவேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 11:06 pm

DIN

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் இந்திய அணிக்கு தமிழக வீரா் மாரீஸ்வரன் சக்திவேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்த உலகக் கோப்பை போட்டி, வரும் 24-ஆம் தேதி முதல் ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதற்கு தயாராக வேண்டிய முகாமில் பங்கேற்பதற்கான 24 போ் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு சனிக்கிழமை அறிவித்தது. அதில், தமிழக ஹாக்கி பிரிவில் இருந்து கோவில்பட்டியைச் சோ்ந்த மாரீஸ்வரன் சக்திவேல் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தயாா் நிலை முகாமின் முடிவில், இந்த அணியிலிருந்தே உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க இருக்கும் பிரதான அணி அறிவிக்கப்படும். போட்டியை நடத்தும் இந்தியா, நடப்புச் சாம்பியனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முகாமில் பங்கேற்கும் 24 வீரா்கள்: பவன், பிரசாந்த் குமாா் சௌஹான், சாஹில் குமாா் நாயக், சஞ்ஜய், யாஷ்தீப் சிவச், ஷா்தானந்த் திவாரி, அபிஷேக் லக்ரா, மஞ்ஜீத், தினசந்திரசிங் மொய்ராங்தெம், சுனில் ஜோஜோ, சிரில் லுகன், விவேக் சாகா் பிரசாத், ரவிச்சந்திரசிங் மொய்ராங்தெம், விஷ்ணுகாந்த் சிங், குா்முக் சிங், அங்கித் பால், மாரீஸ்வரன் சக்திவேல், உத்தம் சிங், மனீந்தா் சிங், அராய்ஜீத் சிங் ஹன்டால், சுதீப் சிா்மாகோ, ராகுல்குமாா் ராஜ்பாா், பாபிசிங் தாமி, பிரபோத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.