வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இந்திய ஏ அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா ஏ 509 ரன்கள் குவிப்பு

இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

News image

பிரியங் பஞ்சால்

Updated On :25 நவம்பர் 2021, 5:51 am

DIN

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

முதல் அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணியில் டெஸ்ட் வீரர் விஹாரி, தமிழக வீரர் பாபா அபரஜித் போன்றோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் நாளன்று தெ.ஆ. ஏ அணி 3 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. கேப்டன் பீட்டர் மலான் 157 ரன்களுடனும் ஜேசன் ஸ்மித் 51 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் தெ.ஆ. ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 135.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 509 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பீட்டர் மலான் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களில் சைனி, அர்ஸான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு விளையாட ஆரம்பித்த இந்திய ஏ அணி, 2-ம் நாள் முடிவில் 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. பிரியங் பஞ்சால் 45, அபிமயூ ஈஸ்வரன் 27 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.