ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

சிறந்த கால்பந்து வீரருக்கான பேலன் தோர் விருதை மீண்டும் வென்றார் மெஸ்ஸி!

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர்...

News image
Updated On :30 நவம்பர் 2021, 12:05 pm

சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் (Ballon d'Or) விருதை 7-வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். 

பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் பேலன் தோர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார். 2021-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது மெஸ்ஸிக்குக் கிடைத்துள்ளது.

2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 என 7 ஆண்டுகளில் இவ்விருதை மெஸ்ஸி வென்றுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லிவான்டாவ்ஸ்கியைத் தோற்கடித்து இவ்விருதை அவர் கைப்பற்றியுள்ளார். மகளிருக்கான  பேலன் தோர் விருதை ஸ்பெயினின் அலெக்ஸியா வென்றுள்ளார். 

சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்ஸி, பாரீஸ் செயிண்ட் ஜெர்மெய்ன் கிளப்பில் இணைந்தார். 

மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி

மனைவி, மகன்களுடன் மெஸ்ஸி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.