டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்: அச்சுறுத்தும் பொலார்ட்

பல்வேறு விதமான சூழல்களைப் பலமுறை எதிர்கொண்டுள்ளதால்...
டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்: அச்சுறுத்தும் பொலார்ட்


அனுபவம்மிக்க வீரர்களும் அவர்களுடைய திறமைகளும் டி20 உலகக் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி மீண்டும் வெல்ல உதவும் என அந்த அணியின் கேப்டன் பொலார்ட் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இருமுறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, பொலார்ட் தலைமையில் களமிறங்குகிறது. கெயில், பொலார்ட், பிராவோ ஆகிய வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் பழுத்த அனுபவசாலிகளாகவும் சாதனை படைத்தவர்களாகவும் உள்ளார்கள். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இரு இடங்களில் கெயிலும் பொலார்டும் உள்ளார்கள். அதேபோல டி20யில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பிராவோ முதலிடத்தில் உள்ளார். மேலும் அதிக டி20 ஆட்டங்களில் விளையாடிய வீரர்களிலும் மூவரும் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளார்கள். இதனால் இந்த அனுபவத்தின் துணையுடன் டி20 உலகக் கோப்பையை மீண்டும் வெல்வோம் எனக் கூறியுள்ளார் பொலார்ட். இதுபற்றி அவர் கூறியதாவது:

இத்தனை வருடங்களாக டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும், வெற்றி பெற என்னென்ன மாற்றங்கள் தேவை என்பதைக் கற்றுக்கொண்டுள்ளோம். இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளோம். நானும் கெய்ல், பிராவோ என மூவரும் டி20 உலகக் கோப்பையில் ஒன்றாக மீண்டும் விளையாடுவது அபாரமானது. நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒன்றாக விளையாடுகிறோம். பல்வேறு விதமான சூழல்களைப் பலமுறை எதிர்கொண்டுள்ளதால் எங்களுடைய அனுபவத்தை உங்களால் முறியடிக்க முடியாது. பல சூழல்களுக்கு நாங்கள் எதிர்வினையாற்றியுள்ளோம். மற்ற வீரர்களும் அதேபோல செயல்பட உதவுகிறோம். உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற டி20 ஆட்டங்களில் விளையாடி, பல சந்தர்ப்பங்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். எங்களுடைய அனுபவங்களைக் கொண்டு இளம் வீரர்களை வழிநடத்துவோம். இதைவிட சிறந்த பயிற்சி உங்களுக்குக் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com