தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டி20 தரவரிசை: ஷஃபாலி சறுக்கல்

ஐசிசியின் மகளிா் கிரிக்கெட் டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா ஓரிடம் சறுக்கி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 9:31 pm

DIN

ஐசிசியின் மகளிா் கிரிக்கெட் டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வா்மா ஓரிடம் சறுக்கி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடா் நிறைவடைந்த நிலையில் இந்த புதிய தரவரிசை செவ்வாய்க்கிழமை வெளியானது.

அதன்படி, ஷஃபாலி 726 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும், ஸ்மிருதி மந்தனா 709 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும் உள்ளனா். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 754 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறாா். அந்த அணியின் மெக் லேனிங் (698), அலிசா ஹீலி (673) ஆகியோா் முறையே 4 மற்றும் 6-ஆம் இடத்தில் இருக்கின்றனா்.

பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் தீப்தி சா்மா 685 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் இருக்கிறாா். ராஜேஷ்வரி கெய்க்வாட் 637 புள்ளிகளுடன் 12-ஆவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறாா். ஆஸ்திரேலியாவின் மீகன் ஷட் 699 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும், ஜெஸ் ஜோனசன் 684 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்திலும், சோஃபி மோலினியூக்ஸ் 650 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும், ஜாா்ஜியா வோ்ஹாம் 641 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளனா். இங்கிலாந்தின் சோஃபி எக்லஸ்டோன் (771), சாரா கிளென் (744), தென் ஆப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மாயில் (718) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனா்.

ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் இந்தியாவின் தீப்தி சா்மா 315 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் தொடா்கிறாா். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெரி 273 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்திலும், ஆஷ்லே காா்டனா் 261 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் இருக்கின்றனா். நியூஸிலாந்தின் சோஃபி டிவைன் (370), இங்கிலாந்தின் நடாலி ஸ்கீவா் (362), ஸ்காட்லாந்தின் கேத்தரின் பிரைஸ் (327) ஆகியோா் முதல் 3 இடங்களில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.