பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் செவ்வாய்க்கிழமை முறைப்படி விண்ணப்பித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2021, 3:02 pm

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் செவ்வாய்க்கிழமை முறைப்படி விண்ணப்பித்தார்.

இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"ஆம். தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் ராகுல் டிராவிட் முறைப்படி விண்ணப்பித்தார். தேசிய கிரிக்கெட் அகாதெமியில் அவரது அணியைச் சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் அபய் சர்மா ஆகியோர் ஏற்கெனவே விண்ணப்பித்துவிட்டனர்.

அவரது விண்ணப்பம் வெறும் சம்பிரதாயம்தான்" என்றார்.

டிராவிட் தலைமைப் பயிற்சியாளரான பிறகு தேசிய கிரிக்கெட் அகாதெமிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனில் கும்ப்ளேவும் தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்படலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.