கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியா மிரட்டல் வெற்றி: கடைசி நாளில் மீண்டும் அடிபணிந்தது இங்கிலாந்து!

இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 3:40 pm

DIN


இங்கிலாந்துடனான 4-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 466 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து கடைசி நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு கிரெய்க் ஓவர்டன் மற்றும் ஆலி ராபின்சன் 4 ஓவர்கள் தாக்குப்பிடித்தனர்.

இந்த நிலையில் புதிய பந்து மாற்றப்பட்டது. அதற்குப் பலனாக ஓவர்டன் 10 ரன்களுக்குப் போல்டானார்.

கடைசி விக்கெட்டாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம், இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.